சேரன்மாதேவி: குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்

ஜூ.வி.நூலகம்பழ.அதியமான்

மிழ்நாட்டு அரசியலை அப்படியே புரட்டிப் போடக் காரணமான ஊர் சேரன்மாதேவி. அந்த ஊரில் இருந்து செயல்பட்டு வந்த குருகுலத்தில் குறிப்பிட்ட நிகழ்வு மட்டும் நடக்காமல் போயிருக்குமானால், தமிழகத்தின் கடந்த முக்கால் நூற்றாண்டு வரலாற்றை கணிப்பதே சிரமமாக இருக்கும். காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரியார் வெளியேறாமல்கூட இருந்திருக்கலாம். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளே உருவாகி இருக்காது. அப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பற்றிய நுணுக்கமான அனைத்துத் தகவல்களையும் தாங்கியதாக இந்தப் புத்தகத்தை எழுதி உள்ளார் பழ.அதியமான். வரலாற்றின் வெளிச்சம்படாத பக்கங்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தோண்டி எடுத்து எழுதக்கூடிய ஆய்வாளர்களில் பழ.அதியமான் குறிப்பிடத்தக்கவர்.

வ.ரா.ஜார்ஜ் ஜோசப், வரதராஜுலு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர். அதன் தொடர்ச்சியே இந்தப் புத்தகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick