மிஸ்டர் கழுகு: மோடிக்கு பிடி கொடுக்காத ஜெ.!

‘‘மோடி விசிட் செய்திகளுடன் வருகிறேன்’’ என வாட்ஸ் அப்பில் தகவல்  அனுப்பியிருந்தார் கழுகார். ஏர்போர்ட், சென்னைப் பல்கலைக்கழகம், போயஸ் கார்டன், சோ வீடு என அலைந்து திரட்டிய செய்திகளோடு வந்து அமர்ந்தார் கழுகார்.  
 
‘‘ ‘தமிழகம் வளர்ச்சியடைந்திருக்கிறது. அதே நேரம் ஊழலும் நிறைந்திருக்கிறது’ என பி.ஜே.பி-யின் அகில இந்திய தலைவர் அமித் ஷா மதுரை விழா ஒன்றில் திரி கொளுத்திப் போட்டு 24 மணி நேரம்கூட முடியாத நிலையில் மறுநாள், பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவை சந்தித்தார்’’ என்று ஆரம்பத்திலேயே வெடி சத்தத்துடன் கழுகார் ஆரம்பித்தார்.

‘‘நெசவாளர் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வரும் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து அவர், போயஸ் கார்டன் போவாரா என்கிற செய்தியும் றெக்கை கட்ட தொடங்கிவிட்டது. வெள்ளிக்கிழமை அன்றுதான் மோடி சென்னை வந்தார். புதன்கிழமை காலையில் வெளியிடப்பட்ட பயணத் திட்டத்தில்கூட போயஸ் கார்டன் விசிட் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அன்றைய இரவில்தான் திடீரென்று ஜெயலலிதாவை மோடி சந்திக்கப் போகும் தகவல்கள் உறுதியாகின.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்