மிஸ்டர் கழுகு: மதுவிலக்கு அமல்!

ஆகஸ்ட்-15 டீல்? எதிர்க் கட்சிகள் ஷாக்!

‘‘ஆகஸ்ட் 15-ம் தேதி கோட்டையில் முதல்வர் கொடியேற்றுவதற்கான முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன” என்றபடியே தலைமைச் செயலகத்தில் இருந்து பறந்து வந்தார் கழுகார்.

‘‘ஆகஸ்ட் 15-ம் தேதி கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா கொடி ஏற்றுவாரா என்ற சந்தேகம் கடந்த 10 நாட்களாக அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் இருந்தது. உடல் நிலையைக் காரணம் காட்டித்தான் அவர்கள் சந்தேகப்பட்டார்கள். அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தப் போகாத முதல்வர், வெளிப்படையாக தனது உடல்நிலையைக் காரணமாகக் காட்டி இருந்தார். தலைமைச் செயலகத்துக்கும் வாரத்துக்கு ஒருமுறைதான் வந்தார். அப்படியே வந்தாலும் ஒரு மணிநேரத்துக்கு மேல் இருக்கவில்லை. உடனடியாக கார்டன் போய்விட்டார். கோட்டையில் இரண்டு படிகள் ஏறும் இடத்தில்கூட கைப்பிடி வைத்துள்ளார்கள். அந்த அளவுக்கு அவருக்குக் கால் வலி இருக்கிறது. எனவே, அவரால் கோட்டை கொத்தளத்துக்கு வர முடியுமா? கொடி ஏற்ற முடியுமா, திறந்த ஜீப்பில் சென்று அணி வகுப்பு மரியாதையை ஏற்க முடியுமா, சுதந்திர தின உரையை அரைமணி நேரம் நின்று ஆற்ற முடியுமா என்ற சந்தேகத்தால்தான், ‘அம்மா கொடி ஏற்றுவாரா?’ என்ற சந்தேகம் கிளம்பியது. இரண்டு நாட்களுக்கு முன்னதாகத்தான், ‘நான் உறுதியாக வருவேன்’ என்று ஒப்புதல் கொடுத்தார் முதல்வர். அதன்பிறகுதான் அணிவகுப்பு ஒத்திகைகள் விறுவிறுப்பாக நடக்க ஆரம்பித்துள்ளன.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்