நிழல் படம் நிஜப் படம்! - 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ண்ணன் பிரபாகரன் ஒரு கட்சி. தம்பி பிரகாசன் ஒரு கட்சி. சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் அண்ணனின் கட்சி தோற்று, தம்பியின் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. கட்சி தொடர்பாக வீட்டிலும் வெளியிலும் எதிரிகளைப்போல் மோதிக்கொள்கிறார்கள். 30 வருடங்கள் உழைத்துக் களைத்து ஓய்வுக்காலத்தை நிம்மதியாகப் பிள்ளைகளுடன் சந்தோஷமாகக் கழிக்கலாம் என்று நினைக்கும் தந்தைக்கு, இந்தச் சூழ்நிலை எப்படி இருந்தது, எவ்வாறு அவர்களை, தான் விரும்பிய பாதைக்கு மாற்றினார் என்பதுதான் ‘சந்தேசம்’ என்ற மலையாளத் திரைப்படம்!

ராகவன் நாயர் 33 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றியவர். ஓய்வுபெற்று, தன் சொந்த ஊரான கேரளாவுக்குத் திரும்புகிறார். அவருக்கு மூன்று மகன்கள். இரு மகள்கள். ஒரு மகளுக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. பெண்ணின் கணவன் ஆனந்தன். அவர் சப்- இன்ஸ்பெக்டராகப் பணிபுரிகிறார். இன்னொரு மகள், திருமணத்துக்காகக் காத்திருப்பவள். மூத்த மகன் பிரபாகரன் சட்டம் படித்தவன். கட்சியே கதியென்று இருப்பவன். அவன் ஆர்.டி.பி கட்சியின் தீவிரமான தொண்டன்.
ஆர்.டி.பி கட்சி  என்பது கம்யூனிஸ்ட் கொள்கை கொண்ட கட்சி. இன்னொரு மகன் பிரகாசன், பி.எஸ்ஸி படித்தவன்; ஐ.என்.எஸ்.பி கட்சியில் தீவிர தொண்டன். ஐ.என்.எஸ்.பி என்பது காங்கிரஸ் கொள்கை கொண்டது. இருவரும் வருமானம் எதுவும் இல்லாமல், செலவுக்கு தந்தையிடம் பணம் எதிர்பார்ப்பவர்கள். கடைசி மகன் பள்ளியில் படிக்கிறான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்