“ஆமா அடிச்சேன்... காது சவ்வு கிழிஞ்சிருச்சுன்னா டாக்டரைப் பாரு!”

உடற்கல்வி ஆசிரியர்களா... உதைக்கும் ஆசிரியர்களா?

சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், மூன்று மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததற்காக ஒரு மாணவனின் இடது காலை, விடுதி வார்டன் அடித்து உடைத்தது தொடர்பாக 12-8-15 தேதியிட்ட ஜூ.வி-யில் எழுதியிருந்தோம். இப்போது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் மாணவர்களை சித்ரவதை செய்த சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு, 10-ம் வகுப்பு படித்துவரும் வினோஸ்ரீராம் என்ற மாணவனுக்கு ஓட்டப் பந்தயத்தில் மிகுந்த ஆர்வம். இந்தப் பள்ளியில் விளையாட்டில் அவன்தான் நம்பர் ஒன். ஏராளமான பரிசுகளை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த அவன், இப்போது கை கால்கள் செயல் இழந்த நிலையில் மருத்துவமனையில் முடங்கிக் கிடக்கிறான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்