மிஸ்டர் கழுகு: “இப்போதே மதுவை எடுத்தால், மக்கள் மறந்துவிடுவார்கள்!”

ஜெயலலிதாவும் உட்கார்ந்துவிட்டார்

தேசியக் கொடியை அணிந்து மிடுக்காகப் பறந்து வந்தமர்ந்தார் கழுகார். சுதந்திர தின விழா பற்றிய செய்திகளை முதலில் கொட்ட ஆரம்பித்தார்.

‘‘உடல்நலக் குறைவால் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை ரத்துசெய்து வரும் முதல்வர் ஜெயலலிதா, சுதந்திர தினத்தில் கோட்டையில் கொடியேற்ற வருவாரா என்கிற சந்தேகம் முந்தைய தினம் வரையில் இருந்தது. வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் சில மாற்றங்களைச் செய்திருந்தார்கள். மோட்டார் பைக் வீரர்கள் புடைசூழ கோட்டை எதிரே இருந்த சாலைக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். அங்கே போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுவதற்காக சிறிய மேடையை பிளாட்பாரத்தை ஒட்டி அமைத்திருந்தார்கள். கடந்த ஆண்டுகளில் இந்த பிளாட்பாரத்தில் ஏறி நின்று அணிவகுப்பை ஏற்றுக்கொள்வார் ஜெயலலிதா. இந்த வருடம் அந்தச் சிறிய மேடையில் ஏறுவதற்காக சரிவுப் பாதை போட்டிருந்தனர். இரண்டு புறங்களிலும் பிடித்துக்கொள்வதற்காகத் தடுப்புகள் வைத்திருந்தனர். ஜெயலலிதா நடந்து வரும் பாதையில் ரெக்ஸீன் விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. முதல்வரின் கார் அங்கே வந்து நின்றதும் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வரவேற்றார். அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அங்கே வேலை இல்லை என்ற போதும் அவரும் வந்து அட்டன்டென்ஸ் போட்டார். அங்கிருந்து மேடைக்கு ஜெயலலிதா வந்தபோது மெதுவாகத்தான் நடந்து வந்தார். சாய்வு தளத்தில் ஏறும்போது கைப்பிடியைப் பிடித்தபடியேதான் நடந்து வந்தார். அந்த மேடையில் இருந்து திறந்த ஜீப்பில் ஏறுவதற்கும் படிக்கட்டுகள் போடப்பட்டிருந்தன!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்