"மாணவர்களை கேடயமாக பயன்படுத்துகிறார் பேராசிரியர்!”

டந்த இதழில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை தலைவர் பொறுப்பில் இருந்து,  துணை வேந்தர் தாண்டவனால் பேராசிரியர் இராமு.மணிவண்ணன்  நீக்கப்பட்டது பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. அது தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் பா.டேவிட் ஜவஹர் அளித்திருக்கும் விளக்கம்:

பேராசிரியர் ஜி.கோட்டீஸ்வர பிரசாத், ‘‘சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். அப்போது ராஜீவ் காந்தி ஆய்வு இருக்கை தொடங்கப்பட்டது. இதை உருவாக்க ஜி.கோட்டீஸ்வர பிரசாத் நியமிக்கப்பட்டார். துறையின் இரண்டாவது இடத்தில் இருந்த முனைவர் எம்.உமாமகேஸ்வரி துறைத் தலைவர் பொறுப்பு வேண்டாம் என்று சொல்லி விட்டார். அந்த அடிப்படையில், துறையில் மூன்றாவது இடத்தில் இருந்த பேராசிரியர் முனைவர் இராமு.மணிவண்ணனுக்கு துறைத் தலைவர் பொறுப்பு கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்