எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்... எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்!

‘இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து​விட்டது. ஆனால், தமிழர்களுக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை’ என்று சொல்கிறது ‘வேட்டி’ குறும்படம். இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்ற தினமான ஆகஸ்ட் 14-ம் தேதி, சென்னையில் இந்தக் குறும்படம் வெளியிடப்பட்டது. படத்தை வ.கெளதமன் இயக்கியுள்ளார்.

இயக்குநர் கெளதமனிடம் பேசினோம். “இந்திய சுதந்திரத்துக்காகப் போராடி அதிகம் செத்துப் போனவன் தமிழன். சுதந்திரத்துக்குப் பின்பும் அதிகமாக செத்துப் போனவனும் தமிழன்தான்.  இதுதான் தமிழனுக்குச் சுதந்திரம் கொடுத்த பரிசு. சுதந்திரம் பெற்று 68 வருடங்களுக்கு அப்புறமும் இன்னும் செத்துக் கொண்டு இருந்தால் இனிமேல் தமிழனுக்குத் தனியாக சுதந்திரம் தேவை. எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும், எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும் என்ற நோக்கத்துடன் இந்தப் படத்தை எடுத்துள்ளேன். தமிழகத்தின் முக்கிய இலக்கிய கர்த்தாவான கி.ராஜநாராயணனின் புகழ்பெற்ற கதைதான் இந்த வேட்டி. இதைக் குறும்படமாக எடுக்கிறேன் என்று சொன்னவுடன் உடனே அனுமதி தந்த கி.ரா., இதற்கு பணம் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்