பெரியோர்களே... தாய்மார்களே! - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப. திருமாவேலன்

ன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 234 இருக்கைகள் இருக்கின்றன. திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை, கடலூர் முதல் கோவை வரை உள்ள 234 தொகுதிகளில் இருந்து உங்களால் வாக்களிக்கப்பட்டவர்கள், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும்தான் இதற்குள் நுழைய முடியும்; உட்கார முடியும்; பேச முடியும்; கேள்வி கேட்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நுழைவுச் சீட்டு, உங்கள் வாக்குச் சீட்டில் மட்டுமே இருக்கிறது. எனவே, எம்.எல்.ஏ-க்களுக்கு உண்மையான தலைவர்கள் ஜெயலலிதாவோ, கருணாநிதியோ அல்ல. நீங்கள்தான். நீங்கள் மட்டும்தான்.

நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா. அதற்கு முன்பு இருந்த பெயர் ‘சென்னை மாகாணம்.’ ‘சென்னை ராஜதானி’ என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். அதற்கும் முன்னால் இந்த மாகாணத்துக்கு என்ன பெயர் தெரியுமா?
‘புனித ஜார்ஜ் கோட்டை மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டது. 1800-களில் இருக்கும் பெரும்பாலான ஆவணங்களில் ‘புனித ஜார்ஜ் கோட்டை மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்