கடற்கரை இல்லாமல் போகும்! !

கடலுக்குள் கல்... கல்லாவில் பணம்

‘எரியும் வீட்டில் பிடுங்கும் வரை லாபம்’ என்பதற்கு உதாரணமாக அரசின் நிவாரணத் திட்டங்கள் இருக்கின்றன. இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டால் கஷ்டங்கள் மக்களுக்குத்தானே தவிர, ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இல்லை. இயற்கைப் பேரழிவுகளின்போதும் உடனடியாக ஏதாவது ஒரு திட்டத்தைப் போட்டு அதில் கமிஷனைப் பார்த்து விடுகிறார்கள்.அப்படியான ஒரு மெகா திட்டம்தான் தமிழகக் கடல் பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக கல் சுவர் அமைக்கும் திட்டம். தேவையில்லாத இடங்களிலும், அதிகப்படியாகக் கற்களைக் கொட்டியும், கொட்டாத கற்களை கொட்டியதாகக் கணக்குக் காட்டியும் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமியால் தமிழகக் கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயின. இதைத் தொடர்ந்து தமிழக அரசு சுனாமி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சென்னை ஐ.ஐ.டி-யில் உள்ள கடல் சார் பொறியியல் துறைத் தலைவர் வி.சுந்தர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. இந்தக் குழு, ‘‘தமிழகக் கடற்கரையில் மொத்த நீளம் 1,076 கி.மீட்டரில் 601 கி.மீட்டருக்குள் வரும் பகுதிகள்தான் பாதுகாப்பற்றவையாக உள்ளன என்றும் இவைதான் சுனாமியின்போது அதிகமாக பாதித்தவை’’ என்றும் அறிக்கை அளித்தது. இதைத் தொடர்ந்து கடல் சுவர் அமைக்கும் திட்டம் செயல் வடிவம் பெற்றது. சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டம் ஸ்ரீபதி என்ற ஒப்பந்ததாரரிடம் கொடுக்கப்பட்டு பணியும் முடிக்கப்பட்டது. பொதுப்பணித் துறையின் கீழ்வரும் இந்தத் திட்டத்தில் நடந்த இமாலய முறைகேடுகள்தான் அந்தக் கல் சுவர்களுக்குள் புதைக்கப்பட்டும்விட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்