உரிமையா? பதவியா?

இலங்கைத் தேர்தல் முடிவு சொல்வது என்ன?

மீண்டும் ஒரு முறை மரண அடி வாங்கியிருக்கிறார் ராஜபக்‌ஷே. கடந்த ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ராஜபக்‌ஷே, எப்படியாவது பிரதமராகிவிடலாம் என்று கனவு கண்டார். ஆனால், “என் கனவு கலைந்துவிட்டது” என்று வாக்குமூலம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். ராஜபக்‌ஷேவின் தோல்வி, இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஓர் ஆறுதல்.

இலங்கையில் சம உரிமையோடும், கண்ணியத்தோடும் தமிழ் மக்கள் வாழும் சூழல் உருவாக வேண்டும் என்று விரும்புவோரால் வரவேற்கப்படுகிற ஒன்றாக, கடந்த 17-ம் தேதி நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு அமைந்துள்ளது. ராஜபக்‌ஷே இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை, ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஐக்கிய தேசியக் கூட்டணி 106 இடங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 இடங்களையும் பிடித்தன. 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெறுவதற்கு 113 இடங்கள் தேவை. அதற்கு 7 இடங்கள் குறைவாகவே ரணில் கட்சி பெற்றுள்ளது என்றாலும், முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி., உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு ரணில் கட்சிக்கு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்