“மத்திய அரசின் திட்டத்துக்கு நாங்கள் எதற்கு பணம் தரவேண்டும்?”

தவிக்கும் தலித் மாணவர்கள்!

‘‘நாங்கள் என்ன பாவம் செய்தோம்? ஏன் இந்த மத்திய, மாநில அரசுகள் பழி வாங்குகின்றன? தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு அரசு பணம் கொடுக்கிறது. அதனை வைத்து இலவசமாகப் படிக்கலாம். படித்து, எங்கள் வீட்டையும் நாட்டையும் காப்பாற்றலாம் என்ற எண்ணத்தோடு கல்லூரிக்குப் போகிறோம். அங்கு போனால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வரவில்லை. உங்களுக்காக நாங்கள் எதையுமே செய்ய முடியாது என்று ஒதுங்கிக்கொள்கின்றனர். எங்களை ஒதுக்கியும் வைக்கின்றனர்” -  இப்படிப்பட்ட குரல், தமிழகக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் ஓங்கி ஒலிக்கிறது. என்ன நடந்தது என்று அறிய, கல்லூரி மாணவர்களைச் சந்தித்துப் பேசினோம்.

அரியலூர் அரசுக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ‘‘நான் இன்ஜினீயரிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். என் அப்பா இறந்துவிட்டார். என் அம்மாவின் நகைகளை அடகு வைத்துத்தான் ஃபீஸ் கட்டினேன். முதலாம் ஆண்டு ஸ்காலர்ஷிப் இன்னும் வரவில்லை. இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டால், ‘வரும்... வரும்’ என்றுதான் சொல்கிறார்கள். எங்களைத் தமிழக அரசுதான் காப்பாற்ற வேண்டும்’’ என்றார் வேதனையுடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்