மிஸ்டர் கழுகு: “இரங்கல் தீர்மானம் போடும்போது பாராட்டிப் பேசலாமா?”

முதல்வருடன் வந்த மூன்று பெண்கள் சட்டசபை சர்ச்சை!

‘சட்டசபை கூடுமா? அடுத்த சர்ச்்சையில் அரசு’ என்ற தலைப்பில் 12.7.2015 தேதியிட்ட ஜூ.வி. கவர் ஸ்டோரி தாங்கிய இதழோடு வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘ஒருவழியாக சட்டசபையைக் கூட்டிவிட்டார்கள். சர்ச்சையும் ஆரம்பித்துவிட்டது’’ என்றபடியே விவரங்களைக் கொட்டத் தொடங்கினார்.

‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியைப் பறிகொடுத்ததால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோதுதான் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு மானியக் கோரிக்கை விவாதங்கள் நடத்தாமல் அவையை ஒத்திவைத்தனர். ஜெயலலிதாவுக்காகச் செய்யப்பட்டது இந்த ஏற்பாடு என்று அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. மார்ச் 25-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம். அதன் பின்பு நான்கு நாட்கள்தான் அவை நடைபெற்றது. சுமார் ஐந்து மாதங்கள் கழித்து இப்போதுதான் சட்டசபை கூட்டப்பட்டிருக்கிறது. மே மாத இறுதியில் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆன பிறகும் உடனே சட்டசபையைக் கூட்டவில்லை. ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டுதான் தேதியைத் தள்ளிவைத்தார்கள், என்கிறார்கள். இப்போது முதல்வர் ஆகி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வென்று சட்டசபைக்கு ஜெயலலிதா முதல்முறையாக வருவதால் தடபுடல் வரவேற்பு செய்யப்பட்டது. போயஸ் கார்டனில் இருந்து கோட்டை வரையில் கட்சியினர் வழிநெடுக நின்று வரவேற்றனர். சபை தொடங்குவதற்கு முன்பே சட்டசபைக்குள் ஜெயலலிதா வந்துவிட்டார். அவர் வந்தபோது அ.தி.மு.க உறுப்பினர்கள் எழுந்து நின்று வரவேற்று மேஜையைத் தட்டி மகிழ்ந்தனர். சபை தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பே நிகழ்ச்சி நிரல் குறிப்புகள் உறுப்பினர்களுக்கும் மீடியாவினருக்கும் வழங்கப்பட்டுவிடும். இந்தமுறை வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று பாராட்டும் விஷயத்தை சத்தமில்லாமல் மறைத்துவிட்டார்கள்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்