பெரியோர்களே... தாய்மார்களே! - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

ரசியலில் இருக்கும் பெண்களை தனிப்பட்ட முறையில் பேசி அவமானப்படுத்துவது ஜெயா அம்மாவுக்கு மட்டும் நடப்பது அல்ல. அது அன்னிபெசன்ட் அம்மா காலத்துக் கெட்ட பழக்கம்!

ஐரீஷ் தகப்பனுக்கும் ஆங்கிலேய மாதுவுக்கும் மகளாகப் பிறந்த அன்னிபெசன்ட்,  பிரிட்டிஷ் பாதிரியாரையே திருமணம் முடித்திருந்தாலும், இந்தியாவைப் ‘புண்ணிய பூமி‘ என்று அழைத்து, ‘இதுவே என் தாய்நாடு’ என்று பிரகடனப் படுத்துபவராக வளர்ந்தார்; வாழ்ந்தார்; மறைந்தார்.
தமிழ்நாட்டு அரசியல், நாட்டு விடுதலை கேட்ட காங்கிரஸ்காரர்களால் ஒரு பக்கமும், சமூக விடுதலை கேட்ட நீதிக்கட்சியினரால் இன்னொரு பக்கமும் நிரம்பி வழிந்தபோது இரண்டுக்கும் இடைப்பட்ட ஹோம்ரூல் இயக்கம் எனப்படும் சுய ஆட்சிக் கட்சியை நடத்தியவர் அன்னிபெசன்ட். காங்கிரஸ் கட்சினரால் கசப்போடு பார்க்கப்பட்ட அவர், நீதிக்கட்சியினரால் வெறுப்போடு நோக்கப்பட்டார். ஆனாலும் அன்னிபெசன்ட் அசரவில்லை; ஓடவில்லை. ஆண் அரசியல்வாதிகளின் அத்தனை அஸ்திரங்களையும் தனது தியாகத்தால், சிந்தனையால், செயல்பாட்டால் எதிர்கொண்டார் அன்னிபெசன்ட். அவரை அரசியலை விட்டே, ஏன் இந்தியாவை விட்டே விரட்டிவிட வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் மற்றும் நீதிக்கட்சியினரின் ஒரே நோக்கம். மரணத்துக்குப் பிறகும், இதோ அடையாறு இயற்கை சூழ் மரங்களுக்கு நடுவில்தான் துயில் கொண்டு வருகிறார் அன்னிபெசன்ட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்