அடாவடி... அத்துமீறல்... வசூல் வேட்டை! ஆட்டம் போட்ட பி.ஆர்.ஓ-க்கள்!

வெளியேற்றியது வெள்ளம்

ரசின் செய்தித் துறைக்குள் இப்போது அதிர்வேட்டுச் சத்தம் கேட்கிறது. கோட்டையிலும் திருநெல்வேலியிலும் பணியாற்றிய இரண்டு செய்தித் துறை அதிகாரிகள் அதிரடியாக கழற்றிவிடப் பட்டிருக்கிறார்கள். அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டிய செய்தித் துறையினர் கடமையைச் செய்யாமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அடாவடிகளை அரங்கேற்றியதற்காகத் தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் திருநெல்வேலி மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணா. இன்னொருவர் தலைமைச் செயலகம் பத்திரிகைத் தொடர்பு உதவி இயக்குநர் உமாபதி.

முதலில் அண்ணாவை பார்ப்போம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பணியாற்றும் அரசு பி.ஆர்.ஓ-க்களை நியமிப்பதும் மாற்றுவதும் செய்தித் துறைதான். ஆனால், தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே அண்ணாவை பந்தாடியிருக்கிறார் திருநெல்வேலி கலெக்டர் கருணாகரன். மாவட்டத்தின் அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்துதான் அதிரடி பாய்ந்தி ருக்கிறது. இதுபற்றி பேசிய பி.ஆர்.ஓ அலுவலக ஊழியர்கள், ‘‘தி.மு.க ஆட்சியில் பணியில் சேர்ந்தவர் அண்ணா. மு.க.அழகிரிக்கு நெருக்கமானவர். அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்டம் போட்டார். தி.மு.க. ஆட்சியில்  அமைச்சராக  இருந்த  பெரியகருப்பனிடம் பி.ஏ.வாகவும் பணியாற்றினார். அப்போது அமைச்சரின் பெயரைச் சொல்லி நிறைய முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அண்ணாவை பல இடங்களுக்குத் தூக்கி அடித்தார்கள். கடைசியில் தனக்கு நெருக்கமானவர்கள் மூலமாக முக்கிய அமைச்சர் ஒருவரைப் பிடித்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாறுதல் வாங்கி வந்தார். அங்கேயும் அவர் மீது ஏராளமான புகார்கள். அமைச்சராக இருந்த பச்சைமால் பெயரைச் சொல்லி வேட்டை நடத்தியாகப் புகார் எழுந்தது. அரசின் நலத்திட்ட கையேடுகளை அச்சடித்து விநியோகம் செய்யாமல் வைத்துக் கொண்டார். அதை அச்சடித்துக் கொடுத்தவருக்கு 2 லட்சம் ரூபாய் பாக்கியை இதுவரை கொடுக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்