பெரியோர்களே... தாய்மார்களே! - 41

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன், ஓவியம்: டிராட்ஸ்கி மருது

ந்தப் பெண் குழந்தை பிறக்கும்போதே ஆரோக்கியம் இல்லாமல் பிறந்தது. ஆனாலும், அந்தக் குழந்தைக்கு அதன் அம்மா தாய்ப்பால் ஊட்டவில்லை. எப்போதும் கடுமையான வயிற்றுப்போக்கு இருந்தது அந்தக் குழந்தைக்கு. அதனால் மெலிந்து நோஞ்சானாகவே இருந்தது. இதோடு கடுமையான சளியும் சேர்ந்துகொண்டது. பள்ளியில் படிக்கும்போது கிட்டப்பார்வை ஏற்பட்டு கண்ணாடி அணியும் அவசியம் அந்தப் பெண்ணுக்கு வந்தது. இந்தத் துன்பத்துடன்தான் மெட்ரிகுலேஷன் படித்தார்.

அடுத்து இன்டர்மீடியேட் போனார். உடல் ஒத்துழைக்க வில்லை. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டார். மருத்துவம் படிக்கப் போனார். அப்போது ஆஸ்துமா ஏற்பட்டது. பல இரவுகளில் மூச்சு முட்டி அவரால் தூங்க முடியாது. மோசமான இழுப்பு ஏற்பட்டு செத்துச்செத்துப் பிழைத்தார். ஆஸ்துமாவில் இருந்து மீளவே முடியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்