வாய் பேசாத பெண்ணை நாசம் பண்ணிட்டானே!

புதுக்கோட்டை தாயின் புலம்பல்

மாற்றுத்திறனாளிகளிடம்கூட வன்புணர்ச்சி காட்டும் வக்கிரத்தில் வந்து நிற்கிறது தமிழகம்! பெண்கள், சிறுமிகள் எனக் கடந்து வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியிடம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது பாலியல் பலாத்காரம்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஈச்சங்காட்டில், தெருவோரத்தில் வசிக்கும் சின்னையா - ராஜேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளான அவர்கள், அருகிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் படித்து வருகின்றனர்.
சின்னையாவின் இரண்டாவது மகளான காமாட்சியைத்தான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா என்கிற மிருகம் வேட்டையாடியிருக் கிறது. காமாட்சியின் தாயார் ராஜேஸ்வரியிடம் பேசினோம். ‘‘காமாட்சி, தேம்பித்தேம்பி அழுதுகிட்டே இருந்தா. பாவாடை முழுக்க ரத்தம். எதுவும் அவளால சொல்ல முடியல. என்ன நடந்ததுனு புரிஞ்சுகிட்டேன். சைகை மூலமா சுப்பையாவ சொன்னா. நான் பதறிப்போயிட்டேன். வயசான பாவிப்பய, வாய் பேச முடியாத எம்பெண்ணை இப்படி நாசம் பண்ணிட்டானே’’ என்று கண்ணீர் வடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்