தொலைபேசி இணைப்பு முறைகேடு... தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை! கண்ணாமூச்சி ஆட்டம் முடியுமா?

பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய வழக்கில், ‘விடாக்கண்டனாக’ சி.பி.ஐ-யும் ‘கொடாக்கண்டனாக’ தயாநிதி மாறனும் ஆட்டம் காட்டுகின்றனர். 

‘தயாநிதி மாறன் மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, அவருக்கு வழங்கப்பட்ட இலவச தொலைபேசி இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தினார். அத்துடன், அந்த இணைப்பின்மூலம் தனி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் உருவாக்கி, சன் டி.வி. நிறுவனத்துக்கு ‘பைபர் கேபிள்’கள்மூலம் அதைக் கொண்டுச் சென்றார். இந்த மோசடியால், அரசுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது’ என்பது சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டு. இதன்பேரில், தயாநிதி மாறன், தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் மீது கடந்த 2011-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. வழக்கில் கூடுதல் ஆதாரங்கள் தேவைப்பட்டபோதிலும், சி.பி.ஐ. அதிகாரிகளால் தயாநிதி மாறனைச் சரியாக விசாரிக்க முடியவில்லை. சி.பி.ஐ-யின் ஒவ்வொரு முயற்சிக்கும் நீதிமன்றத்தின் மூலம் தயாநிதி தடை பெற்றுவந்தார். இந்த நிலையில், தயாநிதி மாறனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ மனு செய்திருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்