மிஸ்டர் கழுகு: தி.மு.க-வில் ஜனவரி திருப்புமுனை!

‘‘திராவிடக் கொள்கைகளை வீட்டுக்கு வெளியே பேசுவார்கள். ஆனால், வீட்டுக்குள் பக்தி மணம் வீசும்’’ என்றபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். புதிர் போட்டு அதை அவரே அவிழ்ப்பதுதான் கழுகார் ஸ்டைல் என்பதால் பொறுமை காத்தோம்.

‘‘மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா. கருணாநிதியின் மகள் செல்வி. இருவரும் கோயில் கோயிலாகப் போய் விசேஷ பிரார்த்தனைகள் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள மஞ்சுநாதா கோயிலுக்கு இருவரும் சென்று வந்திருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு தொடக்கத்தில் கருணாநிதியின் குடும்பத்துக்குப் புதிய திருப்புமுனை நிகழப் போகிறதாம். இதை ஆருடமாகச் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ‘பிரிந்தவர்கள் மீண்டும் கூடுவது, குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு’ தருவதுதான் மஞ்சுநாதா கோயிலின் ஸ்பெஷாலிட்டி. கோயில் அருகே ஒரு மடாபதிபதி எதிர்காலத்தைக் கணித்துச் சொல்வதில் கில்லாடியாம். தயாளு அம்மாளுக்கு மிகவும் வேண்டியவர் அவர். 2ஜி வழக்கில் கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில் தயாளு, பல கோயில்களுக்குச் சென்றார். அப்படித்தான் மஞ்சுநாதா கோயிலுக்குப் போனபோது, அங்கிருந்த மடாதிபதியைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். தயாளு அம்மாள் அவரைச் சந்தித்தபோது, ‘இன்னும் ஒரு வாரத்தில் கனிமொழி ஜாமீனில் விடுதலை ஆவார்’ என அருள்வாக்குச் சொல்லி இருக்கிறார். அவர் சொன்னபடியே கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததாம். அதன்பிறகு அந்த மடத்துக்குச் சென்று 35 லட்சம் ரூபாய் செலவில் மேற்கூரை அமைத்துக் கொடுத்திருக்கிறார் தயாளு அம்மாள். அதன்பிறகு மஞ்சுநாதா மடாதிபதியின் அருள்வாக்குகள் கோபாலபுரத்துக்கு வந்துகொண்டே இருக்கிறதாம். சங்கடங்கள் ஏற்படும்போதெல்லாம் அந்த மடாபதிபதியை நேரில் சந்தித்து ஆலோசனைகள் கேட்டு வருகிறார்களாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்