“நெருக்கடிநிலை காலத்தில் இருக்கிறோமா?”

‘என்ன செய்தார் ஜெயலலிதா?’ என்ற கட்டுரை 25.11.15 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில், ‘மந்திரி தந்திரி’ பகுதியில் வெளியானது. அந்த இதழ்கள் கடைக்கு வருவதற்கு முன்பே, ஆளும் தரப்பில் இருந்து ஆனந்த விகடனுக்கு மறைமுக மிரட்டல்கள் ஆரம்பித்துவிட்டன. விகடன் இதழ்களை விற்ற கடைக்காரர்கள், முகவர்கள் மிரட்டப்பட்டனர். ஆங்காங்கே ஆளும் கட்சிக்காரர்கள் விகடன் இதழ்கள் பொதுமக்கள் கைகளுக்குக் கிடைக்காதவாறு மொத்தமாக வாங்கிச் சென்றனர். அத்துடன், விகடன் முகநூல் பக்கம் முடக்கப்பட்டது. ஆனந்த விகடன் மீது அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது. தமிழக அரசின் இந்தப்  போக்கைக் கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள், பத்திரிகையாளர் சங்கங்கள் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தன. 

மு.கருணாநிதி, தி.மு.க தலைவர்: ‘‘ஜெயலலிதாவைப் பற்றி ‘ஆனந்த விகடன்’ எழுதியதும், அவதூறு வழக்குப் போடுகிறார்களே. கடந்த 30 வாரங்களாக, வாரந்தோறும் ஒவ்வோர் அமைச்சரைப் பற்றியும், பல்வேறு குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி அந்த இதழ் விமர்சனம் செய்தது பற்றி ஜெயலலிதா, எந்த வழக்கும் போடவில்லையே? அதையெல்லாம் ஜெயலலிதா உண்மை என்று ஏற்றுக்கொள்கிறாரா? ‘ஆனந்த விகடன்’ இதழ், எந்த அரசியல் கட்சியையும் சார்ந்த பத்திரிகை அல்ல. ஆனால் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரைக்காக இந்த அரசு அவர்களை மிரட்டுவதும், பயமுறுத்துவதும் நியாயம்தானா?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்