பெரியோர்களே... தாய்மார்களே! - 42

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

சென்னை ராயப்பேட்டையில் இருக்கிறது சத்தியமூர்த்தி பவன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகம் அது. எஸ்.சீனிவாச ஐயங்காரும் சி.என்.முத்துரங்க முதலியாரும் 19 ஆயிரத்து 589 ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கிய மைதானம் அது. 1930-களில் சுமார் 45 ஆயிரம் ரூபாய் செலவில் சிறு கட்டடம் கட்டப்பட்டு, அதனை சேலம் சக்கரவர்த்தி  சி.விஜயராகவாச்சாரியார் திறந்துவைத்தார். இப்போது சென்னை காமராஜர் அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில் பொருட்காட்சி நடக்கிறது அல்லவா? அதைப்போல அந்தக் காலத்தில் ராயப்பேட்டையில் இந்த மைதானத்தில் பொருட்காட்சி நடக்கும். 1939-ம் ஆண்டில் அங்கு மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. பொருட்காட்சியோடு சேர்த்து அதுவரை இருந்த கட்டடமும் சாம்பலானது.

காங்கிரஸ் ஆட்சியை மீட்டெடுத்த காமராஜரே, இந்த மைதானத்தையும் பொலிவுபடுத்தினார். ஐந்தரை லட்சம் ரூபாய் செலவில் ஒரு கட்டடம் கட்டி 1963-ல் அவரே திறந்துவைத்தார். அதற்கு ‘சத்தியமூர்த்தி பவன்’ என்று பெயரும் வைத்தார். கலைஞர் கருணாநிதி எல்லாவற்றுக்கும் ‘அண்ணா’ என்று பெயர் சூட்டுவதைப்போல, காமராஜர் சகலத்துக்கும், ‘சத்தியமூர்த்தி’ என்றே பெயர் சூட்டுவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்