ஃபேஸ்புக்... இருண்ட முகம்!

வழக்கறிஞர் ந.ரமேஷ்

‘‘அடிப்படையான இணைய வசதிகளைப் பற்றித் தெரியாத மக்களுக்கு, இணையம் மூலம் நடக்கும் பல ஆயிரம் டாலர்களுக்கான வர்த்தகம் பற்றியும் தெரியாது. அத்தகைய மக்களுக்கு இணையத்தை அறிமுகப்படுத்துவதில் ஃபேஸ்புக் ஆர்வம் காட்டி வருகிறது. இணையச் சேவையை உலகம் முழுவதும் இலவசமாகக் கொடுப்பது அதிகச் செலவு பிடிக்கும் திட்டம். அதனால் இணையச் சேவை வழங்கி வரும் சில நிறுவனங்களுடன் இணைந்து குறிப்பிட்ட இணையச் சேவைகளை மட்டும் இலவசமாக வழங்குவது அனைவருக்கும் பலன் அளிக்கும். இதை எதிர்ப்பவர்கள் ஏற்கெனவே இணைய வசதி பெற்றவர்கள்தான். நாம் இணைய வசதி அற்றவர்களின் நிலையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வாய்ப்புள்ள இணையதளமே உண்மையான இணையதளமாக இருக்க முடியும்” என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் சொல்லி இருக்கிறார்.

இதைப் படிக்கும்போது உலக மக்களுக்கு உன்னதமான சேவையை, எந்தவித லாப நஷ்டங்களும் பார்க்காமல், தங்கள் எண்ணங்களைச் சுதந்திரமாகச் சொல்ல பாதைகள் அமைத்துத் தரும் சேவை நிறுவனத்தை இவர்கள் நடத்தி வருவது போன்ற தோற்றம் தெரிகிறது. ஆனால், அப்படித்தான் ஃபேஸ்புக் நிறுவனம் நடந்துகொள்கிறதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்