குறிவைக்கப்பட்ட ப.சிதம்பரம் குடும்பம்!

“என் மீதும் என் குடும்பத்தின் மீதும் சேற்றை வாரி இறைக்கின்றனர். இந்த அரசாங்கம், எனது குடும்பத்துக்கு அநீதி இழைக்கத் தொடங்கி உள்ளது. நாங்கள் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” என்று கர்ஜித்தார் ப.சிதம்பரம். காரணம், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சென்னை, திருச்சியில் உள்ள வாசன் ஐ கேர் மருத்துவமனைகள், கார்த்திக் சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய அமலாக்கத் துறையும் வருமானவரித் துறையும் அதிரடிச் சோதனை நடத்தியதுதான்.

கார்த்திக் சிதம்பரம் சம்பந்தப்பட்ட இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப் பண பரிவர்த்தனை தொடர்பான சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, வருமானவரித் துறையும் மத்திய அமலாக்கத் துறையும் இந்த அதிரடி ரெய்டுகளை நடத்தின. அப்போது, வாசன் கண் மருத்துவமனை மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனங்கள் செய்த வருமானவரி முறைகேடுகள் பற்றி வருமானவரித் துறை ரெய்டு மேற்கொண்டது. ஆனால், மத்திய அமலாக்கத் துறையின் நடவடிக்கை வேறு விதமானது. தயாநிதி மாறனை நிம்மதி இழக்க வைத்துக்கொண்டிருக்கும் ஏர்செல் - மேக்ஸிஸ் விவகாரத்தில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தையும் சேர்த்து கோர்த்துவிடும் தீவிர நடவடிக்கை அது. மத்தியில் பி.ஜே.பி அரசு ஆட்சிக்கு வந்ததுமே ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தைச் சுற்றி இந்த விவகாரங்கள் ஆரம்பித்து விட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்