தத்தளிக்கும் சென்னை!

தரைப்பாலங்கள் உடைந்தன... சாலைகள் முடங்கின... மின்சாரம் துண்டிப்பு...

சென்னை மாநகரத்தை ‘சென்னை தீவு’ என்று உருமாற்றி வைத்துள்ளது மழை. விடாமல் கொட்டித் தீர்த்த மழை, சென்னை நகரை மட்டும் துண்டித்த தீவாக்கிவிட்டுச் செல்லவில்லை. அந்தத் தீவுக்குள் பல தீவுகளை உருவாக்கி வைத்துவிட்டுச் சென்றுள்ளது.

மழை தொடங்கியதும் அது காவு வாங்கிய முதல் விஷயம் சென்னை நகரின் சாலைகளைத்தான். கடந்த அக்டோபரில் பெய்த மழையிலேயே பலத்த சேதமடைந்திருந்த சாலைகள், அதன்பிறகு தொடங்கிய மழையில் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. சுரங்கப் பாதைகள் மூழ்கின. அந்த நேரத்திலும் மழை விடாமல் கொட்டிக்கொண்டிருந்தது. சென்னையைச் சுற்றி உள்ள ஏரிகளில் நீர் மட்டம் அதிகரிக்க அதிகரிக்க, அங்கிருந்த தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அடையாற்றிலும் கூவத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன்,  மாநகரம் இதுவரை சந்தித்திராத பேரழிவை நோக்கித் தள்ளப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்