பெரியோர்களே... தாய்மார்களே! - 44

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

சென்னை சைதாபேட்டையைத் தாண்டுபவர்கள் எம்.சி.ராஜா மாணவர் விடுதியைப் பார்க்காமல் இருக்க முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்காக அந்த மாணவர் விடுதியை 100 ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பர் பழனியப்பனோடு சேர்ந்து தொடங்கியவர்
எம்.சி.ராஜா.

சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்டவர்களில் முதலாமவர் எம்.சி.ராஜா. இவர்தான் பட்டியலின மக்களின் சார்பில் சென்னை மாகாணத்தில் அமைச்சர் ஆன முதலாமவர். டாக்டர் அம்பேத்கருக்கு முன்பே, லண்டன் சென்று பிரிட்டிஷ் அரசிடம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னையை விளக்கியவர்;  மாண்டேகுவைச் சந்தித்தார்; செம்ஸ்போர்டுவைப் பார்த்தார்; வெலிங்டனுக்கு விளக்கினார்; ரீடிங்பிரபுவுக்கு எடுத்துச் சொன்னார்; கோஷன் பிரபுவுக்குப் புரியவைத்தார்; இர்வின் பிரபுவுக்கு விளக்கம் அளித்தார். பிரிட்டிஷாருக்கு இந்திய நாட்டின் சமூக அமைப்பைப் புரியவைத்தால்தான், அவர்களிடம் இருந்து கிடைக்கும் குறைந்தபட்ச சீர்த்திருத்தங்களின் மூலமாகப் பட்டியலின மக்களை அடித்தட்டில் இருந்து மேல்தட்டுக்கு இழுத்துக்கொண்டு வர முடியும் என்று இறுதியாகவும் உறுதியாகவும் எம்.சி.ராஜா நம்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்