மிஸ்டர் கழுகு: பாதுகாப்பு அதிகாரிகள் பந்தாடப்பட்டது ஏன்?

மழை பாதிப்பு நீங்கவில்லை. தொண்டை கரகரப்புக்கு இஞ்சி மிட்டாய் போட்டுக்கொண்டு நமக்கும் ஒன்றை நீட்டிவிட்டு, பேசத்தொடங்கினார் கழுகார்.

‘‘கலெக்‌ஷன் வேலைகள் கச்சிதமாக நடக்கின்றன. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கான நிவாரணம் வழங்குவதற்கு அ.தி.மு.க தரப்பில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க பிரமுகர்கள் தங்களது மாவட்டத்தில் அ.தி.மு.க சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேலை, வேட்டி, பேன்ட், சட்டை, நைட்டி, சானிட்ரி நாப்கின் உட்பட பல்வேறு பொருள்களைச் சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்ல முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். ‘ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள எம்.எல்.ஏ-க்கள் தங்களது தொகுதியில் சேகரிக்கும் நிவாரணப் பொருட்களை மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று வழங்க வேண்டும். யார் யார் எவ்வளவு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்கள்’ என்ற விவரங்களைத் தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு. மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் தங்களது செல்வாக்கை நிரூபிக்க போட்டி போட்டுக்கொண்டு நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கின்றனர்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்