உண்மையான இளைய தமிழகம்!

குப்பைக் கூளங்களையும், சேறு சகதிகளையும் சென்னை மாநகரின் வீதிகள் முழுவதும் குவித்துவிட்டுப் போயிருக்கிறது வெள்ளப் பேரழிவு. மாநகராட்சி நிர்வாகம் மந்த கதியில் இருந்தபோதிலும், மாநகராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்கள் தன்னார்வத்துடன் கடமையாற்றி வருகிறார்கள். ஆனாலும், மலைபோல குவிந்துள்ள குப்பைகளையும், சகதிகளையும் அவர்களால் மட்டுமே அகற்றிவிட முடியாத நிலையில் சில அரசியல் கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் தூய்மைப் பணியைத் துரிதமாக மேற்கொண்டு வருகின்றன. தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞர் பிரிவு, தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உட்பட பலரும் சென்னை நகரை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறார்கள். ‘தூய்மை இந்தியா’ திட்டம் என்பது, உண்மையில் இதுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்