“விலங்குகளைப்போல நடத்துகிறார்கள்!”

துயரத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள்

குப்பைமேடாக மாறிவிட்ட சென்னையைச் சுத்தப்படுத்தும் மகத்தான பணியை மாநகராட்சி ஊழியர்கள் செய்துவருகிறார்கள். இவ்வளவு குப்பைகளையும் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் மட்டும் அகற்ற முடியாது என்பதால் பல்வேறு மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்திருக்கிறார்கள். பிற மாவட்டங்களில் இருந்து துப்புரவுத் தொழிலாளர்கள் 1,385 பேரும், துப்புரவுத் துறை அதிகாரிகள் 122 பேரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். தாமதமான நடவடிக்கையாக இருந்தாலும் இது பாராட்டக்கூடியதுதான். ஆனால், வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களுக்கு எந்த வசதியும் செய்துகொடுக்காமல் விலங்குகளைப்போல நடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

“வெளியூர்களில் இருந்து துப்புரவுத் தொழிலாளர்​களைக் கூட்டிச்சென்ற விதமே, மனித உரிமை மீறியச் செயலாக இருந்தது. குப்பை அள்ளும் டிரக் வண்டியில் 20 பேர், 30 பேர் என ஆடு, மாடுகளைப் போல தொழிலாளர்களை ஏற்றிச்சென்றனர். 16 மணிநேரம் அவர்கள் பயணம் செய்து சென்னை வந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்குப் போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. சாலையோரங்களில் பலர் தங்கியுள்ளனர். இரண்டு வாரங்களாக மாற்று உடைகள் இல்லாமல் பலர் தவித்து  வருகின்றனர். இரவு, பகல் பாராமல் பல மணி நேரத்துக்கு அவர்களைப் பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். அதனால், பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்” என்கிறார், துப்புரவுத் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்காகப் போராடிவரும் பன்னீர்செல்வம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்