மாலை நேர வகுப்பா... மன்மத வகுப்பா?

ஏழைச் சிறுமியை இம்சித்த பள்ளித் தாளாளர்!

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விவகாரத்தில் மீண்டும் தலைகுனிந்து நிற்கிறது புதுச்சேரி. சில மாதங்களுக்கு முன்பு மூன்று சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறையினரே குற்றவாளிகளாக இருந்த விவகாரம், பெரும் அதிர்வலைகைளை ஏற்படுத்தியது. அந்தக் கோபமே இன்னும் தணியாத நிலையில், மேலும் ஓர் அவமானகரமான செயலுக்குத் துணைபோயிருக்கிறது புதுச்சேரி காவல் துறை.

புதுச்சேரி கதிர்காமத்தில் இயங்கி வருகிறது கே.எஸ்.பி. இன்டர்நேஷனல் பள்ளி. இது முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கமானவரும், புதுச்சேரி நகரமைப்புக் குழுவின் சேர்மனுமான கே.எஸ்.பி. ரமேஷுக்கு சொந்தமானது. இவர் தனது பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். மேலும் வசதியில்லாத ஏழை மாணவிகளுக்குப் பள்ளிக் கட்டணம் இலவசம் என்று சொல்லி, அவர்களைத் தன் வலையில் வீழ்த்தும் இவரது செயலும் இப்போது கசியத் தொடங்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்