சுத்தமான ஊராச்சு!

நிவாரணம் வழங்குவதைத் தாண்டி தலைநகர் சென்னையில் நடப்பது குப்பைகள் அள்ளும் பணி. சமூக இயக்கங்களைத் தாண்டி, அரசியல் தலைவர்கள் இதில் ஆர்வமாக இறங்கி இருக்கிறார்கள். மக்கள் நலக் கூட்டமைப்பு தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இந்தப் பணிகளில் முழுமையாக இறங்கி உள்ளனர். விஜயகாந்த், பிரேமலதா, ஆகியோரும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். பி.ஜே.பி தலைவர்களான தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோரும் செயல்பட்டு வருகின்றனர்.

த.மா.கா. இளைஞர் அணியினர் யுவராஜ் தலைமையில், தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் குப்பை அள்ளும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ‘ஊரைச் சுத்தப்படுத்துகிறோம்’ என்று அரசியல் கட்சிகள் சொல்வது இப்போதுதான் உண்மையிலேயே நடந்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்