டாஸ்மாக் லிக்கரும்... நிவாரண ஸ்டிக்கரும்!

“மக்களின் குரல் ஆட்சியாளர்களின் காதுகளில் விழவில்லை”

‘மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க’ இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. சென்னையை மூழ்கடித்த வெள்ளத்தில் பாய்ந்தது தண்ணீர் மட்டுமா, பல லட்சம் பேரின் கண்ணீரும்தான். மழையும் வெள்ளமும் விட்டுப்போன வலிகள், இழப்புகள், காயங்கள் உயிரிழப்புகள் அனைத்தும் கால ஓட்டத்தில் கரைந்து போய்விடலாம். மீட்பிலும் நிவாரணத்திலும் கைகோத்த உள்ளங்கள், கரங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடியதா? இந்த வெள்ளத்தில் அரசு காட்டிய மெத்தனமும் இதேபோலதான் நம் நினைவைவிட்டு விலகாது.

 சென்னையே வெள்ளக் காடாக மாறியிருந்த​போது, ‘டாஸ்மாக்’ கடைகள் மட்டும் ‘பாஸ் மார்க்’ வாங்கியிருந்தன. மின்சாரம் இல்லாத சூழலிலும் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வீட்டில் இருந்ததை எல்லாம் வெள்ளம் வாரி சுருட்டி சூறையாடிக் கொண்டுபோன பிறகு, மக்களிடம் மிச்சம் சொச்சம் என்ன இருக்கும்? அப்படியே மிஞ்சிய கரன்சிகளைக்கூட டாஸ்மாக்கைத் திறந்து வைத்து கல்லா கட்டிய கொடுமை எந்தத் தேசத்திலும் நடந்திராத ஒன்று. பேரிடர் நேரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிற அறம்கூட எங்கே போனது? ஆவின் பால் கிடைக்கவில்லை. டாஸ்மாக் சரக்கு மட்டும் தட்டுப்பாடின்றிக் கிடைத்தது எப்படி? இந்த இரண்டுக்குமே ஒரே அரசு இயந்திரம்தானே தலைமை? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்