பி.ஏ-வை பலிகடா ஆக்கினாரா அமைச்சர்?

டாஸ்மாக் ஊழல்கள்...

ழல் குற்றச்சாட்டுகளுக்கான முதல் பலியை தொடங்கிவைத்துள்​ளார்கள். ஊழல் குற்றச்சாட்டில் தலை உருட்டப்பட்ட அமைச்சர் நத்தம் விசுவநாதனின் பி.ஏ அதிரடியாகக் கழற்றிவிடப்​பட்டு உள்ளார். இதுபோன்ற காட்சிகளை இனி அதிகமாகப் பார்க்கலாம்.

‘‘அமைச்சர் நத்தம் விசுவநாதனின் தனி உதவியாளர் செந்தில், மதுரை மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் தனபால், அவரின் மூன்று உதவியாளர்கள் மீதான ஊழல் புகார்மனு மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? உடனே இந்தப் புகார் சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பற்றி ஜனவரி 5-ம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எம்.வேணுகோபால் கடந்த 11-ம் தேதி போட்ட உத்தரவினால், டாஸ்மாக் நிர்வாகமும், அமைச்சர் நத்தம் விசுவநாதன் வட்டாரமும் ஆடிப்போய் உள்ளன. இந்த வழக்கு மூலம், அமைச்சர் நத்தம் விசுவநாதன் பெயரைச் சொல்லி டாஸ்மாக்கில் சிலர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்