மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-யுடன் நெருங்கும் ஜெயலலிதா!

ரகசியமாய் சந்தித்த உளவு அதிகாரி...

‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழுடன் என்ட்ரி ஆனார் கழுகார். ‘‘முன்னாள் போலீஸ் டி.ஜி.பி நடராஜ் நீக்கம்... பிறகு சேர்ப்பு, அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வப் பத்திரிகையான நமது எம்.ஜி.ஆரின் இணையதளத்தில் கருத்துக்கணிப்பு... திடீரென அது காணாமல் போனது - என இந்த இரண்டு சம்பவங்களைப் பார்க்கும்போது அ.தி.மு.க-வில் முடிவுகள் எடுக்க முடியாத குழப்பம் நீடிப்பது அப்பட்டமாகத் தெரிகிறது’’ என்றபடியே பேச ஆரம்பித்தார் கழுகார்.

‘‘ஜெயலலிதாவின் அறிக்கை, பேச்சு, பேட்டி, அ.தி.மு.க செய்திகள், கட்சியில் நீக்கம், சேர்ப்பு போன்ற தகவல்களைத் தாங்கி வருகிறது ‘நமது எம்.ஜி.ஆர்’. இதில் வரும் கட்டுரைகள், பாக்ஸ் மேட்டர்கள் ஆகியவை கார்டனின் ஒப்புதல் இல்லாமல் வெளிவராது. அரசியல் சார்ந்த முக்கியமான கட்டுரைகள் ஜெயலலிதாவின் ஒப்புதல் பெற்ற பிறகே பிரசுரம் ஆகும். எந்தக் கட்சிகளை விமர்சிக்க வேண்டும், யாரை திட்டக் கூடாது என்பது பற்றி எல்லாம் அங்கே கட்டுப்பாடுகள் உண்டு. சித்ரகுப்தன் கவிதைகளில் முக்கியமானதை ஜெயலலிதா, முன்கூட்டியே படித்து ஓகே செய்த பிறகுதான் வெளியிட அனுமதி தருகிறார். அப்படிப்பட்ட நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையின் இணையதளம் திடீரென்று முடக்கப்பட்டு இருக்கிறது. drnamadhumgr.com என்கிற அதன் இணையதளத்துக்குள் நுழைந்தால் இணையதளம் இயங்கவில்லை. ‘நமது
எம்.ஜி.ஆரின் அதிகாரபூர்வ இணையதளம் சமூக விரோதிகளால் முடக்கப்பட்டிருக்கிறது. அதனால், வலைதளம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது’ என்கிற அறிவிப்புதான் பளிச்சி​டுகிறது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்