கருணாநிதியால் திறக்கப்பட்டது... சசிகலா குடும்பத்தினரால் வாங்கப்பட்டது!

சொத்துக் குவிப்பு விவகாரம் சீஸன் - 2

சிகலா குடும்பத்தினர்களால் குவிக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து தகவல் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் முதல்வர் ஜெயலலிதா, அதுகுறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. இப்போது மீண்டும் ஒரு திரையரங்கத்தை ‘அவர்கள்’ விலைக்கு வாங்கியள்ளது வெளிச்சத்துக்கு வர, கடும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் 8.11.2015 தேதியிட்ட ஜூ.வி. இதழில், ‘புதிய இளவரசர்கள், கணக்கில்லா கம்பெனிகள் குவியும் சொத்துக்கள்’ என்ற தலைப்பில் சசிகலா குடும்பத்தினர்கள் வாங்கியுள்ள சொத்துகள் குறித்து விரிவாகச் சொல்லியிருந்தோம். இப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மிகவும் பிரபலமான அன்னபூர்ணா திரையங்கத்தை விலைக்கு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்து உள்ளன. சசிகலாவும், இளவரசியும் தலைவர்களாக உள்ள ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்காக அதன் இயக்குநர் கார்த்திகேயன் இதை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்