மிஸ்டர் கழுகு: தேர்தல் தள்ளிப் போகுமா?

ஏப்ரல் மாதம்... இரண்டு கட்டம்

‘‘ஆண்டுக்கு ஒரு முறை அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட வேண்டும். இந்த ஆண்டுக்கான கூட்டம் கூடுவதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என கடந்த இதழில் சொல்லி இருந்தேன். இந்த மாதம் 31-ம் தேதி கூடும் என தேதி அறிவித்துவிட்டார்கள். ஆனால் எந்த இடம் என்பதைக் குறிப்பிடவில்லை” என்றபடியே உள்ளே வந்த கழுகார் செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.

‘‘வழக்கமாக சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில்​தான் பொதுக்குழு கூடும். அதுதான் ஜெயலலிதாவுக்கு ராசியான மண்டபம். ஆனால், மழை வெள்ளத்தால் சென்னை சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கின்றன. வானகரம் ஏரியாவுக்குச் செல்லும் சாலைகளும் மோசமாக இருக்கின்றன. அவ்வளவு தூரத்துக்குப் போனால் ‘பீக் ஹவரி’ல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதோடு மழை வெள்ளத்தின்போது சென்னையைச் சுற்றி காரில் சென்று மக்களிடம் ஆறுதல் சொல்லாத முதல்வர், பொதுக்குழுவுக்கு மட்டும் எப்படிப் போக முடிந்தது என்கிற கேள்விகள் எல்லாம் எழலாம். இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் இடத்தை மாற்ற முடிவு செய்தார்களாம். வானகரம் ஏரியா திருவள்ளூர் மாவட்டத்துக்குள் வருகிறது. சென்னைக்குள்​ளேயே பொதுக்குழுவை நடத்த இடங்களைத் தேர்வுசெய்து வருகிறார்கள். திருவான்மியூரில் ஓர் இடத்தைப் பார்வையிட்டார்கள். தனியாருக்குச் சொந்தமான அந்தத் திடலில், குறுகிய காலத்தில் ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது. எழும்பூர் ராணி மெய்யம்மை அரங்கில் நடத்தலாமா என்ற யோசனையும் ஓடிக் கொண்டிருக்கிறது. இல்லை​யெனில், தலைமை அலுவலகத்திலேயே நடத்தி​விடலாம் எனவும் பேச்சு அடிப்பட்டுக் கொண்டிருக்​கிறது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்