பெரியோர்களே... தாய்மார்களே! - 48

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

‘‘தொகை குறிப்பிடப்படாத செக் ஒன்றை நான் உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் நிரப்பிக்கொள்ளலாம்’’ - என்று முகமது அலி ஜின்னாவிடம் மகாத்மா காந்தி சொன்னார். ‘‘நான் கேட்பது அந்த செக்-கை விடக் குறைவானதுதான்’’ என்று பதில் அளித்தார் ஜின்னா. காந்தி சொன்னது ஒற்றுமை. ஜின்னா கேட்டது பிரிவினை. ‘‘எனது ரத்தத்தில்தான் பிரிவினை நடக்கும்’’ என்றார் காந்தி. பிரிவினை முடிந்தபிறகு அவரது ரத்தம் காவு வாங்கப்பட்டது. காந்தியின் ரத்தத்துக்கு வலிமை அதிகம். அதனால்தான் ரத்தப் பலிகள் இன்றுவரை தொடர்கின்றன.

முதலாம் உலகப்போர் நடந்தபோது மும்பை கவர்னராக இருந்த வெல்லிங்டன் யுத்த மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் கலந்துகொள்ள பால கங்காதர திலகருக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவரை அவமானப்படுத்தினார் வெல்லிங்டன். அந்த இடத்திலேயே தட்டிக்கேட்ட ஒரே ஆள் முகமது அலி ஜின்னா. ‘‘எனக்குத் தேவை இந்து - முஸ்லிம் ஒற்றுமை. நாம் சண்டை போட்​டால் பகைவனான பிரிட்டிஷ் அரசுக்குத்​தான் லாபம்’’ என்ற தெளிவில் இருந்தவர் முகமது அலி ஜின்னா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்