“ஆமைகள் வந்தன... அமைச்சர்கள் வரவில்லை!”

திருநின்றவூர் திகு... திகு...30 நாட்கள் சோகம்...

சென்னை அருகே உள்ள திருநின்றவூரில், மக்கள் கடந்த ஒரு மாத காலமாக தண்ணீரில் தத்தளித்து வருகிறார்கள். திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சுதேசி நகர், கன்னிகாபுரம், முத்தமிழ் நகர், பெரியார் நகர் ஆகிய பகுதிகள் தனித்தீவாகவே மாறிவிட்டன. படகு மூலமாக அந்தப் பகுதிகளில் வலம் வந்தோம். துர்நாற்றம் தாங்க முடியவில்லை. பாம்புகளும், ஆமைகளும் தண்ணீரில் நீந்திச் செல்கின்றன. இந்தச் சூழலில் 10 ஆயிரம் பேர் எப்படித்தான் இருக்கிறார்களோ தெரியவில்லை.

12-வது வார்டு கவுன்சிலரான, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அன்புச்செழியன், “இந்தப் பகுதி திருநின்றவூர் பெரிய ஏரியை ஒட்டி உள்ளது. மழையில் வீடுகள் அனைத்தும் மூழ்கி விட்டன. ஏரியின் தண்ணீரை மதகுகள் மூலம் வெளியேற்றினால் மட்டுமே இங்கிருக்கும் குடியிருப்புகள் தப்பிக்கும். தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற ஹைகோர்ட்டில் உத்தரவு பெற்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்