தீண்டாமைக்குள் தீண்டாமையா?

திண்டுக்கல்லில் நடந்த கொடுமை!

காதல் திருமணங்களுக்காகக் கொடூரக் கொலைகள் வரை ஆதிக்க சாதிகளால் அரங்கேற்றப்படும் சூழலில், அதே காதல் திருமணத்துக்காக அருந்ததியர் இளைஞர் மீது, தலித் அமைப்பினரே தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள விட்டல் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அருந்ததியினர் வகுப்பைச் சேர்ந்தவர். இவரும், பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த நதியா என்ற பெண்ணும் காதலர்கள். இவர்கள் காதலை பெண் வீட்டார் விரும்பாத காரணத்தால் நதியாவுக்கு மாப்பிள்ளை பார்த்து, விடிந்தால் திருமணம் என்ற நிலையில், தனது காதலனுடன் தலைமறைவாகிவிட்டார் நதியா. இந்த நிலையில், தமிழ்ப் புலிகள் அமைப்பின் மாவட்டச் செயலாளர் போஸ், இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார் என அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளது ஒரு தரப்பு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்