மிஸ்டர் கழுகு: மக்கள் தரிசனம்!

ஊர் ஊராக பறந்து வருகிறார்!

ழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘அடுத்த சினிமா ஆரம்பம் ஆகலாம்’’ என்று பீடிகை போட்டார். அவரை ஆச்சர்யமாகப் பார்த்தோம்.

‘‘முதல்வர் ஜெயலலிதா விரைவில் மக்கள் தரிசனமாகப் பயணம் போகலாம் என்று அ.தி.மு.க. வட்டாரத்துத் தகவல்கள் சொல்கின்றன. தேர்தல் நெருங்கி வருகிறது என்பதால், அரசியல் தலைவர்கள் மக்களைச் சந்திப்பது ஆச்சர்யமானது அல்ல. ஸ்டாலின் இரண்டு மாதங்களாகக் கலக்கிக்கொண்டு இருக்கிறார். இது சம்பந்தமான ரிப்போர்ட்டுகள் ஜெயலலிதாவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. இது சாதாரண டூர் மாதிரிதான் இருக்கும் என்று முதலில் நினைத்தார்களாம். ஆனால், எல்லா இடங்களிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும் மேலிடத்துக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது. இது சம்பந்தமாக ஆளும் கட்சி சார்பில் பதிலடி தரவேண்டும் என்று நினைத்து சில யோசனைகள் சொல்லப்பட்டன. ‘எதுவும் செய்ய வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று ஜெயலலிதா சொல்லிவிட்டார். ஸ்டாலின் போகும் இடங்களில் எந்தத் தடங்கலும் செய்ய வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார். இந்தச் சூழ்நிலையில் ஜெயலலிதாவுக்குச் சில யோசனைகள் வந்துள்ளதாக அ.தி.மு.க. வட்டாரம் சொல்கிறது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்