"இயற்கைக்கும் பாரம்பர்யத்துக்கும் என்றும் மதிப்புண்டு!”

திருவள்ளூரில் தமிழ் மண்ணே வணக்கம்

சொந்த மண்ணிலே தனித்து விடப்பட்ட தமிழின் தனித்துவத்தையும், தமிழரின் கலாசாரத்தையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி, ‘தமிழ் மண்ணே வணக்கம்.’ ஜூனியர் விகடன் நடத்தும் இந்த நிகழ்ச்சி, சென்னையை அடுத்த பட்டாபிராமில் உள்ள தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் கல்பனா பாய், அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் கு.சிவராமன், ‘‘ஒவ்வொரு வருடமும் பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் முதன்முறையாக பாரம்பர்ய முறையில் மலேரியாவுக்கு ‘ஆர்டிமிசின்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்ததற்காக யூயூ டு என்ற சீனப் பெண்மணிக்கு இந்த வருடம் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. இயற்கைக்கும், பாரம்பர்யத்துக்கும் என்றுமே மதிப்புண்டு என்பதற்கு இதைவிட பெரிய சான்று தேவையில்லை. புற்றுநோயைத் தடுக்கக்கூடிய ‘பாலிஃபீனால்’ என்ற வேதிப்பொருளைக் கொண்ட சிறந்த தாவரம் தேயிலை. ஆனால் பூச்சிக்கொல்லிகளின் வரவால் அதுவே, இன்று புற்றுநோய்க்கான முக்கியக் காரணியாக மாறிவிட்டது. தேவையில்லாத களைகளை நீக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட களைக்கொல்லியே நம் நாட்டுக்குத் தேவையில்லாததுதான். உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட அனைத்து வகையான களைக்கொல்லிகளுக்கும் இந்தியாவில் மட்டும் எந்தத் தடையும் இல்லை. மற்ற நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா என்பது, ‘வீணான பொருள்களை விற்பதற்கான 120 கோடி மக்களைக்கொண்ட ஒரு சந்தையாகவே மாறிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்