நிதிஷுக்கு பின்னால் பிரசாந்த் கிஷோர்...

மோடிக்கு பி.பி. எகிற வைக்கும் பீகார்!

துவரை நாகரிகமாகத்தான் பிரதமர் மோடி பேசிவந்தார். ஆனால், ‘த்ரீ இடியட்ஸ்’ என்று சொல்லும் அளவுக்கு அவரை தடுமாற வைத்துள்ளது பீகார் தேர்தல். அங்கு, மூன்று கட்ட தேர்தல் முடிந்து உள்ளது. நவம்பர் 5-ம் தேதி நடக்கும் 5-ம் கட்டத்துடன் பீகார் தேர்தல் முடிவுக்கு வருகிறது. ஒரு மாநிலத்தில் நடக்கும் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தல் அளவுக்கு, தனக்கு சவாலான ஒன்றாக நினைக்க ஆரம்பித்துவிட்டார் மோடி.

பீகார், பெரிய மாநிலங்களில் ஒன்று. அங்கு, சாதியை முன்னிலைப்படுத்தியே சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. யாதவ் இனத்தினர் 14  சதவிகிதம்,  தாழ்த்தப்பட்ட வர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தலா 16 சதவிகிதம், முற்படுத்தப்பட்ட வகுப்பினரான பிராமணர்கள், ராஜ்புத், பூமிதார், காயஷ்த் ஆகியோர் 15 சதவிகிதம் என உள்ளனர். முற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளை பி.ஜே.பி. கூட்டணி குறிவைத்துள்ளது. லாலு பிரசாத்தின் 15 வருட ஆட்சியில், காவல் துறை உட்பட அரசின் பல்வேறு மட்டங்களில் யாதவ் இனத்தவர் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களுடைய வாக்குகளும், முஸ்லிம்களின் வாக்குகளும் நிதிஷ் கூட்டணிக்குப் போவது உறுதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்