தாரை வார்க்கப்பட்ட தாமிரபரணி...

தடியடி நடத்திய தமிழக போலீஸ்!

ரோடு பெருந்துறை கோக் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்த தமிழக அரசு, நெல்லை மாவட்டத்தில் பெப்சி ஆலைக்கு அனுமதி கொடுத்ததில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க போடப்பட்ட ஒப்பந்தத்தால் கொந்தளித்து உள்ளனர் விவசாயிகள்.

நெல்லை மாவட்டம் கங்கை​கொண்டான் சிப்காட் வளாகத்தில் பெப்சி ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆந்திராவைச் சேர்ந்த ‘பிரதிக்‌ஷா பிசினஸ் சொல்யூஷன்ஸ்’ என்கிற நிறுவனத்தின் சார்பாக அமைக்கப்பட்டு வரும் இந்த ஆலைக்காக 36 ஏக்கர் அரசு நிலம் 99 வருடங்களுக்குக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு இந்த ஆலையை நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்