“இம்மி என்றால் எவ்வளவு?”

புதுச்சேரியில் தமிழ் மண்ணே வணக்கம்!

ரலாற்று உணர்வு, சமூக சிந்தனை, பண்பாடு போன்றவற்றை இளைய தலைமுறையினரிடம் விதைக்கும் நிகழ்ச்சி, ‘தமிழ் மண்ணே வணக்கம்.’ ஜூனியர் விகடன் நடத்தும் இந்த நிகழ்ச்சி, புதுச்சேரி ஸ்ரீ கணேஷ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் கு.சிவராமன், ‘‘இன்றைக்கு 1,000 மரணங்களில் 740 மரணங்கள் தொற்றாத வாழ்வியல் நோய்களினால் நிகழ்வதாக மருத்துவ உலகம் தெரிவிக்கிறது. காசநோய், தொழுநோய், அம்மை நோய் போன்றவை தொற்றுநோய்கள். புற்றுநோய், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற தொற்றாத நோய்களில்தான் இன்றைய இளைஞர் கூட்டம் சிக்கிக்கொண்டிருக்கிறது. இவற்றுக்கு எல்லாம் காரணம், ஒட்டுமொத்தமாக சீரழிந்துகொண்டிருக்கிற நம்முடைய உணவுக் கலாசாரம். நம்மில் பெரும்பாலானோருக்குப் பிடித்தமான உணவாக இருப்பது கோழிக்கறி. வாரத்தில் ஒருநாள் கோழிக்கறி சாப்பிடுவதாக வைத்துக்கொண்டாலே, ஒரு நபர் சாப்பிடும் கோழிக்கறியில், ஒரு முழு கோர்ஸ் ஆன்டிபயாட்டிக்கில் இருக்கும் மருந்துப் பொருள் இருக்கிறது. ஆக, வருடத்தில் 52 வாரங்களும் மருத்துவர்களிடம் நீங்கள் செல்லாமலேயே ஆன்டிபயாட்டிக் சாப்பிட்டால் என்னென்ன விளைவுகள் வருமோ, அவ்வளவும் நாம் கோழிக்கறி சாப்பிட்டாலே வரும். நாம் சாப்பிடும் பிராய்லர் கோழிகளுக்கு பறக்கவோ, நடக்கவோ தெரியாது. 24 மணி நேரமும் ஒரே இடத்திலேயேதான் அடைக்கப் பட்டிருக்கும். உடல் பருமனை ஏற்றுவதற்காக அதற்கு ஹார்மோன் மற்றும் ஊக்க மருந்துகளும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. அந்தக் கோழிகள்தான் இன்று பெரும்பாலான வீடுகளில் விருப்ப உணவாக இருக்கிறது. இப்படியான கோழிக்கறிகளைச் சாப்பிடுவதன் மூலமாக எட்டு அல்லது ஒன்பது வயதிலேயே சிறுமிகள் பூப்படைந்துவிடுகிறார்கள் என்றும், இவர்களைப் போன்றவர்களுக்குத்தான் சினைப்பை நீர்க்கட்டிகளும், மார்பகப் புற்றுநோய்களும் அதிகம் வர வாய்ப்பிருக்கின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்