சிவகாசிக்கு வேட்டுவைக்கும் சீன பட்டாசு!

வேதனையில் உற்பத்தியாளர்கள்

தீபாவளி நேரத்தில், சிவகாசியில் வழக்கமாக நடை​பெறும் பட்டாசு வியாபாரம் சற்று டல் அடிக்​கிறது. கள்ளத்​தனமாக இந்தியாவுக்குள் வரும் சீன பட்டாசுகளே அதற்குக் காரணம். இதனால் பட்டாசு ஆலை அதிபர்கள் மற்றும் பட்டாசுத் தொழி​லாளர்களை சோகம் கவ்வி இருக்கிறது.
சிவகாசி உட்பட விருதுநகர் மாவட்டத்தில் 850-க்கும் மேற்பட்ட  பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்திச் செய்யப்படும் பட்டாசுகள் தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. சிவகாசி பகுதியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழி​லாளர்கள், பட்டாசுத் தொழிலைத்தான் நம்பியிருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, சீன பட்டாசுகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், சிவகாசி பட்டாசு விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூத்த நிர்வாகியான ஆசைத்தம்பியிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்