பெரியோர்களே... தாய்மார்களே! - 34

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

‘தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழைக் கொண்டாடிய முதல் இந்தியர்’ என்ற பட்டத்தை மகாத்மா காந்திக்குத் தூக்கிக் கொடுக்கலாம். தமிழ்மொழி மீதும் தமிழ் இனத்தின் மீதும் அந்த மனிதருக்கு அதீத ஆர்வம் வந்ததற்கு என்ன காரணம்?

காந்திக்கு முதன்முதலில் அறிமுகம் ஆன தமிழர்கள் எல்லாம் மேன்மையானவர்களாக இருந்தார்கள். அதனால்தான் தமிழும் தமிழ்நாடும் அவருக்கு ஈர்ப்புக்குரியதாக இருந்தது. தன்னுடைய வாழ்க்கையைப் பணயம்வைத்து உரிமைக்காகப் போராடிய பாலசுந்தரம், ‘என்னுடைய சத்தியாகிரகம் வெல்வதற்கு இவர்தான் காரணம்’ என்று காந்தியால் பாராட்டப்பட்டு 18 வயதில் சிறையில் மரணம் அடைந்த சுவாமி நாகப்பன், ‘எனது அண்ணன் மரணத்தைவிட இவரது மரணம் என்னைப் பாதித்துவிட்டது’ என்று காந்தியை உருகவைத்த தில்லையாடி வள்ளியம்மை, சொந்த வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் போராடி மறைந்த நாராயணசாமி, பாரிஸ்டராக இருந்தாலும் கூலித் தொழிலாளியைப்போல பொருட்களைக் கூவிக்கூவி விற்ற ஜோசப் இராயப்பன் - இப்படிப்பட்ட தியாகத் திருவுருவங்களைப் பார்த்துத்தான் தமிழர்கள் மீது காந்தி பற்றுவைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்