“இதுதான்டா தீர்ப்பு!” - நீதிபதியை மிரட்டிய ரவுடிகள்

ஜெயலலிதாவின் ஊழல் வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவப்பா, மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மைசூர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பட்டசோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற நீதிபதி சிவப்பா. அப்பா, சிக்கே கவுடா. அம்மா, பெட்டம்மா. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சிவப்பா, எம்.ஏ. இலக்கியமும், சட்டமும் பயின்றவர். பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் இரண்டு முறை அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். 1991-ல் பெங்களூரு உயர் நீதிமன்றத்திலும், 1994-ல் சென்னை உயர் நீதிமன்றத்திலும் நீதிபதியாகப் பணியாற்றியவர். சிவப்பா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது 1996-ம் ஆண்டு,  ஜெயலலிதாவுக்கு எதிரான கலர் டி.வி. ஊழல் வழக்கில், அவரது 7 முன் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தவர். இதனால் ஜெயலலிதா சிறை சென்றார். அதே ஆண்டு ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கை சுப்பிரமணியன் சுவாமி தொடுத்தார். இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி லத்திகா சரண் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ‘அரசியல் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாகப் போடப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர். இந்த மனுவை 6.12.1996-ல் நீதிபதி சிவப்பா விசாரித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்