“வரிவிலக்குத் தொகை ரசிகர்களுக்கு மட்டும்தான்!”

உயர் நீதிமன்றம் பளீர்

‘கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட்ட திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை, திரையரங்க உரிமையாளர்கள் அரசிடம் திருப்பிச் செலுத்த வேண்டும். வரிவிலக்குப் பயன், மக்களுக்குத்தான்’ என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு, சினிமாவில் வரிவிலக்கு என்பது மக்களுக்கான உரிமை என்பதை உணர்த்தியிருக்கிறது.

முந்தைய தி.மு.க ஆட்சியில், தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்குக் கேளிக்கை வரி ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், எது தமிழ்ப் பெயர் என்ற சர்ச்சைகள் கிளம்பியதோடு, படத்தின் பெயரைத் தமிழில் வைத்துவிட்டு அதில் இடம்பெறும் வசனங்கள் ஆங்கிலத்தில் இருந்தன. இதனால், கடந்த 2011-ம் ஆண்டு தமிழில் பெயர் வைத்து, பிறமொழி கலப்பில்லாத வசனங்கள், ஆபாசம் இல்லாத காட்சிகள் ஆகியவை இல்லாமல் இருந்தால்தான் அந்தப் படத்துக்குக் கேளிக்கை வரி ரத்து என்று  அறிவிப்பு வெளியானது. மேலும், ஒரு படத்துக்குக் கேளிக்கை வரிவிலக்கு வழங்கலாமா, வேண்டாமா என்பதை முடிவுசெய்ய ஏழு பேர் கொண்டு குழு இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்