“எல்லை தாண்டி வந்தால் 25 கோடி அபராதம்!”

இலங்கை அரசின் புதிய உத்தரவு...கலக்கத்தில் மீனவர்கள்

மிழக மீனவர்களைச் சுட்டுக்கொன்றும், தாக்குதல் நடத்தி ஊனப்படுத்தியும், பிடித்துச் சென்று சிறையில் அடைப்பதுமான இலங்கைக் கடற்படையின் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ‘இனி எல்லை தாண்டி வரும் மீனவர்களின் படகுகளுக்கு ரூ.25 கோடி அபராதம் விதிப்போம்’ என அடுத்த அஸ்திரத்தை அப்பாவி மீனவர்கள் மீது ஏவியுள்ளது இலங்கை அரசு. பதிலுக்கு, ‘எல்லை தாண்டி வரும் இலங்கை படகுகளுக்கு ரூ.75 கோடி அபராதம் விதிப்போம்’ என்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இதுகுறித்து இந்திய இலங்கை நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பின் நிர்வாகி யு.அருளானந்தத்திடம் பேசினோம். ‘‘இந்திய மீனவர்கள் பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பகுதிகளிலேயே மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர். பாக் நீரிணை பகுதி குறுகிய கடல் பரப்பை எல்லையாகக் கொண்டிருப்பதே அதற்குக் காரணம். இதனால் நம் மீனவர்கள் 2 பகுதிகளில் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிப்பது தவிர்க்க முடியாததாகிறது. அதே நேரத்தில், இந்தியாவின் கடல் பகுதியைக் கொண்ட 9 மாநிலங்களில் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்