‘புஸ்’வாணம் ஆன மோடி மேஜிக்!

‘மகா’ கூட்டணியின் ‘மெகா’ வெற்றிபி.ஜே.பி-க்கு வெடிவைத்த பீகார்

‘வாழ்வா, சாவா?’ என்ற தீவிரத்தோடு பீகார் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட பி.ஜே.பி. மண்ணைக் கவ்வியிருக்கிறது.

மொத்தம் 243 தொகுதிகள்கொண்ட பீகாரில், பி.ஜே.பி கூட்டணிக்கும் நிதிஷ்குமார் தலைமையிலான மகா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது. பீகார் அரசியலில் எதிரெதிர் துருவங்களில் இருந்த லாலுவும், நிதிஷ்குமாரும் கை கோத்தது பி.ஜே.பி-க்கு பெரும் சவால். பிரதமர் மோடியே நேரடியாகக் களத்தில் குதித்தார். வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கு அடுத்தபடியாக மோடி அதிகமாக சுற்றியது பீகாரில்தான். 32 பிரசாரக் கூட்டங்களில் பேசி மோடி அசத்திய போதும் தாமரை மலரவில்லை. ‘3 இடியட்ஸ்’ என்றெல்லாம் எதிர்க் கட்சிகளை பிரதமர் மோடி ஒரு பிடி பிடித்தார். அது, கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.  ‘மாட்டிறைச்சியை முன்வைத்து மதவாத உணர்வுகளைக் கிளறிவிடுகிறார்’ என பிரதமருக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன. பி.ஜே.பி. தலைவர் அமித்ஷாவும் இன்னொரு பக்கம் களமிறங்கி 86 கூட்டங்களில் பேசினார். ஒட்டுமொத்த மோடி காபினெட்டும் பீகாரில் முகாமிட்டும் ‘செமத்தியான அடி’ வாங்கி இருக்கிறது பி.ஜே.பி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்