“ஆலை வேண்டாம் என்றால், அடிக்கப் பாய்கிறார் எம்.எல்.ஏ!”

சிமென்ட் ஆலையால் சர்ச்சை

“சிமென்ட் ஆலைகள் ஆரம்பிக்க எங்களுடைய விளைநிலங்களைக் கொடுத்தோம். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருவோம் என்றார்கள். ஆனால் இப்போது, வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்யப்போவதாகச் சொல்கிறார்கள். தற்போது செயல்பட்டு வரும் சிமென்ட் ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால், ஆஸ்துமா உட்பட பல்வேறு நோய்களால் எங்கள் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே, எங்களுக்குத் தொழிற்சாலையே வேண்டாம் என்று சொல்கிறோம். அப்படிச் சொன்னால் அடிக்கப் பாய்கிறார்கள்” என்றார் சூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா.

அரியலூரில் அரசு சிமென்ட் ஆலை 350 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்படும் என்று 2011-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சிமென்ட் ஆலை விரிவாக்கம் தொடர்பாகக் கருத்துக்கேட்புக் கூட்டம் கடந்த 4-ம் தேதி அரியலூரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த பூவுலகின் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்தது. போலீஸார் மற்றும் டி.ஆர்.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வான துரை.மணிவேல் உள்ளிட்டோர் முகிலனைத் தள்ள முயன்றனர். அதனால், கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்